பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு சிறப்பு சிகிச்சை!

சுபான்ஷு சுக்லா உட்பட விண்வெளி வீரர்கள் 4 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

 

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்ட டிராகன் விண்கலம் இன்று கலிஃபோர்னியா அருகே கடலில் இறங்கியது.

விண்கலத்தின் கதவை திறக்க அமெரிக்க கடற்படை வீரர் இருவர் டிராகன் விண்கலம் மீது ஏறி அதனை மீட்பு படகுடன் இணைத்து படகுக்கு அருகேகொண்டு வந்து படகில் பாதுகாப்பாக டிராகன் விண்கலம் ஏற்றப்பட்டது.

கடுமையான வெப்பத்தை கடந்து கடலில் விழுந்ததில் விகாலத்தின் நிறமே மாறியிருக்கிறது. டிராகன் விண்கலத்தின் உள்ளிருந்தும் வெளியே இருந்து திறக்கும் பணிகளை வீரர்கள் செய்தனர்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாட்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும்சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு டிராகன் கிரேஸ் விண்கலம் மூலம் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் கடலில் இறங்கினர்.

இதனை தொடர்ந்து சுக்லா உட்பட 4 வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைள் மேற்கொள்ளப்படும். பின் பூமியின் ஈர்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக, 7 நாட்கள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவர்கள் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2027-ல் செயல்படுத்தப்படவுள்ளஸ்ரோவின் மனித விண்வெளிப் பய திட்டமான ககன்யான் திட்டத்துக்கு அனுபவ ரீதியாக உதவும் வகையில், சுபான்ஷூ சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணத்துக்காக சுமார் ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.