பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ( வண்டி எண் 06001 )…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ( வண்டி எண் 06001 ) 2022 ஜனவரி 1 தேதி புதன்கிழமை தாம்பரத்திலிருந்து இரவு 09.45 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06002) ஜனவரி 13 வியாழக்கிழமை திருநெல்வேலியிலிருந்து இரவு 09.30 மணிக்குப் புறப்படும். சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06005 ) சென்னையிலிருந்து ஜனவரி 13 வியாழக்கிழமை மாலை 03.30 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06006) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14 அன்று மாலை 03.10 மணிக்குப் புறப்படும்.

நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06004) ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17 திங்கட்கிழமை தாம்பரத்திலிருந்து மாலை 03.45 மணிக்குப் புறப்படும். திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06040) திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு ரயில் ( வண்டி எண் 06039) ஜனவரி 17 காலை 10.45 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.