முக்கியச் செய்திகள் இந்தியா

சஞ்சய் ராவத்தை 4 நாட்கள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி

பண மோசடி வழக்கு தொடர்பாக சிவ சேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுமதி கோரினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனினும், நீதிமன்றம் 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது. ஆகஸ்ட் 4 ம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே அனுமதி அளித்தார்.

முன்னதாக, பத்ரா சால் நில மோசடி தொடர்பாகவும், அதில் பண மோசடி நடந்திருப்பது தொடர்பாகவும் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை இருமுறை சம்மன் அனுப்பியது. எனும், விசாரணைக்கு ஆஜராகாத சஞ்சய் ராவத், நாடாளுமன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கால அவகாசம் கோரி இருந்தார்.

இதை ஏற்க மறுத்த மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகம், சஞ்சய் ராவத்தை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்தது.

சஞ்சய் ராவத்திடம் விசாரணை நடத்தும் நோக்கில் அவர் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுகவின் சாதனை ஒருபக்க விளம்பரம் – சீமான் தாக்கு

Halley Karthik

மழை, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்: அதிமுக

Halley Karthik

பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் அபார வெற்றி!

Vandhana