முக்கியச் செய்திகள்

இந்தியாவின் மருத்துவத் தலைமையகமாக உள்ளது சென்னை – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

சென்னைதான் இந்தியாவிற்கு மருத்துவத் தலைமையகமாக இருந்து வருகிறது என கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலகத் தமிழ் வர்த்தக சபை
சார்பில், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டு, மருத்துவர்களுக்கு விருது வழங்கினார். அப்போது, மேடையில் பேசிய கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மருத்துவ கட்டமைப்பு கேரளா போல் தமிழகத்தில் நன்றாக உள்ளது. தமிழகத்தில்
மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னைதான் இந்தியாவிற்கு மருத்துவத் தலைமையகமாக இருந்து வருகிறது. கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். உலக அளவில் இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஏழை மக்களுக்கு அனைத்து வகையான உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் விதத்தில் மருத்து நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கும் பட ஷூட்டிங் நிறைவு!

Halley Karthik

‘பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும்’ – துரை வைகோ

Arivazhagan Chinnasamy

ஜோஸ் பட்லர் சதம்; மும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

G SaravanaKumar