சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் ஜூன் 21ஆம் தேதியன்று சிறப்பு முத்திரையை இந்திய தபால் துறை வெளியிட உள்ளது.
ஏழாவது சர்வதேச யோக தினம் வரும் ஜீன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்திய தபால் துறை ரத்து செய்வது தொடர்பான சிறப்பு முத்திரையை வெளியிடுகிறது. இதை ஆங்கிலத்தில் ’cancellation stamp’ என்று அழைப்பார்கள். கருப்பு மையில் பதிக்கப்படும் இந்த சிறப்பு முத்திரையில், யோகா தொடர்பான வாக்கியங்கள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.
சிறப்பு முத்திரையின் நோக்கம்!
தபால் தலையை ரத்து செய்வது தொடர்பான இந்தச் சிறப்பு முத்திரையின் பயன்பாட்டால், ஏற்கனவே பயன்படுத்திய அஞ்சல்தலையை மீ்ண்டும் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் வருகின்ற 21ஆம் தேதி முதல் தபால் நிலையங்களிலிருந்து செல்லும் எல்லா அஞ்சல்களிலும் இந்த முத்திரை பதிக்கப்படும் என்று இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.







