ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ரோகா என்ற மாற்று திறனாளி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு அந்த மாரத்தானை நிறைவு செய்தது பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
மாரத்தான் ஓட்டப்பந்தயத்துக்கு தயாராவதற்கும் அதை நிறைவு செய்வதற்கும் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவில் தயாராக வேண்டும். அதிக தூரம் ஓடுவதற்கு உடலில் போதுமான ஸ்டெமினா வேண்டும். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ரோகா என்பவர் இந்த தகுதிகள் இல்லாமலேயே மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு பந்தய தூரத்தை நிறைவு செய்துள்ளார்.
கனடா ரன்னிங் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் படி, அலெக்ஸ் ரோகா என்ற மாற்றுத் திறனாளி பார்சிலோனா மாரத்தானை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். அதாவது பந்தய தூரமான 42 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடங்கள் 51 நொடிகளில் நிறைவு செய்துள்ளார். இவர் மாரத்தானை நிறைவு செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 76 சதவீத மாற்று திறனுடன் இந்த பந்தய தூரத்தை அலெக்ஸ் ரோகா நிறைவு செய்துள்ளார்.







