#Spain | முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 10 பேர் பலி!

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயின் நாட்டில் சரகோசா நகருக்கு சுமார் 28 கி.மீ. தொலையில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில்…

ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

ஸ்பெயின் நாட்டில் சரகோசா நகருக்கு சுமார் 28 கி.மீ. தொலையில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் மறதிநோய் மற்றும் பிற மன நல பிரச்னையால் பாதிக்கப்பட்ட 82 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த காப்பகத்தில் நேற்று (நவ.15) காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எரிந்து காப்பகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையும் படியுங்கள் : #ProKabaddiLeague | பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றி!

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். புகையால் மூச்சுத் திணறி அவர்கள் உயிரிழந்தாக தெரிகிறது. மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.