சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எறும்பு, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை நிறுவியுள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இங்கு சுழற்சி முறையில் ஆய்வு பணிகளை செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆய்வுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவுகள், விண்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவன மான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை இணைந்து 2,170 கிலோ எடையுள்ள பொருட்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளன.
ஆய்வுப் பணிகளுக்கான கருவிகள், விண்வெளி வீரர்களுக்கான உணவுப் பொருட்கள் (ஐஸ்கிரீம் உள்பட) மற்றும் ரோபோ கை, எறும்பு, எலுமிச்சை, அவகோடா உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விண்கலம் இன்று விண்வெளி ஆய்வு மையத்தை அடைகிறது.