தெற்கு ரயில்வேயில் ஒரு மின்சார ரயிலில் கூட கழிவறை வசதி இல்லை – அதிர்ச்சித் தகவல்

இந்தியா முழுவதும் இயக்கப்படும் 120 மின்சார ரயில் இன்ஜின்களில் மட்டும் கழிவறை வசதி உள்ளதாகவும், தென்னக ரயில்வேயில் ஒரு மின்சார ரயில் இன்ஜினில் கூட கழிவறை வசதி இல்லை அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2019ஆம்…

இந்தியா முழுவதும் இயக்கப்படும் 120 மின்சார ரயில் இன்ஜின்களில் மட்டும் கழிவறை வசதி உள்ளதாகவும், தென்னக ரயில்வேயில் ஒரு மின்சார ரயில் இன்ஜினில் கூட கழிவறை வசதி இல்லை அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு ரயில் இன்ஜின்களில் கழிவறை அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மத்திய ரயில்வேயில் 15 இன்ஜின்களிலும், மேற்கு மத்திய ரயில்வேயில் 16 இன்ஜின்களிலும், கிழக்கு ரயில்வேயில் ஒரு ரயில்வே இன்ஜினிலும், தென்கிழக்கு ரயில்வேயில் 5 மின்சார இன்ஜின்களிலும், வடகிழக்கு எல்லை ரயில்வேயில் ஒன்று, தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 26 ரயில் இன்ஜின்களிலும், தென் மத்திய ரயில்வேயில் 27 ரயில் இன்ஜின்களிலும், கிழக்குக் கடற்கரை ரயில்வேயில் 28 ரயில் இன்ஜின்களிலும், தென்மேற்கு ரயில்வேயில் ஒன்று என மொத்தம் 120 ரயில் என்ஜின்களில் மட்டும் கழிவறை வசதி உள்ளது.

தென்னக ரயில்வேயில் ஒரு ரயில் இன்ஜினிலும்கூட கழிவறை வசதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 9 மண்டலங்களில் மிக சொற்பமான மின்சார ரயில் இன்ஜின்களில் மட்டும் கழிவறை வசதி உள்ளது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல நூறு கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் இயக்கும் நிலையில் இந்த அவல நிலை உள்ளது. குறிப்பாக நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்களில் கூட மின்சார இன்ஜின்களில் கழிவறை இல்லாத அவல நிலை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.