தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டி- வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.  புதுச்சேரியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, தெலங்கானா,  கர்நாடகா, …

புதுச்சேரியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. 

புதுச்சேரியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழ்நாடு,
கேரளா ஆந்திரா, தெலங்கானா,  கர்நாடகா,  புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 12 வீரர்களைக் கொண்ட ஆண்கள் அணியும்,  12 வீராங்கனைகளுக்கு கொண்ட பெண்கள் அணியும் பங்கு பெற்றன.  இறுதிப் போட்டியில் கேரளாவை எதிர்கொண்ட பெண்கள் அணி 7-0 என்ற கணக்கில்  முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது.  மேலும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.

அதே போன்று ஆண்கள் பிரிவில் கேரளாவை எதிர்கொண்ட ஆண்கள் அணியினர் பெனால்டி சூட் காரணமாக ஒரு கோளை தவற விட்டு இரண்டாம் இடம் பிடித்தனர்.

இதனை அடுத்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சின்னாளபட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பயிற்சியாளர் பிரேம்நாத் தலைமையில் ராஜன் உள் விளையாட்டு அரங்கில் சால்வை அணிவித்து பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.