தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த துணை பேராசிரியர் பெண்ணை கரம்
பிடித்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்லத்துரை.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமம் திருவள்ளுவர் நகரில்
வசித்து வருபவர் விவசாயியின் மகன் செல்லதுரை குட்டிமார்க்ஸ். இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நகரம் அர்பாமினாச் அரசு பல்கலைகழகத்தில் இணை பேராசியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணி பிரிந்து வந்தார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வந்த அடமா நகரம் எத்தியோப்பியா பகுதியை சேர்ந்த அக்லிலுகிஸான், என்பவரின் மகள் மென்பரே அக்லிலு என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில்திருமணம் நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய முறை படி தென் ஆப்பிரிக்கா மணமகள் புடவை அணிந்து தாலிக்கட்டி கொண்டு மாலை மாற்றி தமிழக மாப்பிள்ளையை கரம்பிடித்த இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மணப்பெண்ணின் வீட்டாருக்கு விசா
கிடைக்காததால் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த திருமண நிகழ்ச்சியில் ம தி மு க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும்
மணமகனின் உறவினர்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தி சென்றனர்,
ம. ஸ்ரீ மரகதம்







