நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா – வசீகரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். இளைய மகள் சவுந்தரயாவுக்கு தொழிலதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.
சவுந்தர்யா – அஸ்வின் விவாகரத்துக்குப் பின்னர் வேத் தனது தாய் சவுந்தர்யாவுடன் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டும் சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் உடன் மீண்டும் திருமணம் நடைபெற்றது. சவுந்தர்யா திரைப்பட தயாரிப்புத் துறையில் பணியாற்றி வருவதோடு, HOOTE என்ற சமூக வலைதளத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், விசாகன் – சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
https://twitter.com/soundaryaarajni/status/1569008568749428737?t=T_jRTxTB9ZilphMD2gmY3g&s=08
இந்த தகவலை சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘கடவுளின் அபரிமிதமான கருணையினாலும், பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், விசாகன், வேத் மற்றும் நான் வேதின் இளைய சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மருத்துவர்களுக்கு நன்றி ‘ எனப் பதிவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா









