நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு சொமேட்டோவின் சிஇஓ தீபிந்தர் கோயல் தனது ஊழியர்களின் தாய்மார்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்தியாவின் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான சோமாட்டோ, அன்னையர் தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அம்சமான “போட்டோ கேக்” தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த புதிய அம்சத்தை சோமாட்டோவின் சிஇஓ தீபிந்தர் கோயல் அன்னையர் தினத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தினார்.
இதையும் படியுங்கள் : “I.N.D.I.A. கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகப்போவது உறுதி” – பிரதமர் மோடி பேச்சு!
நேற்று அன்னையர் தினம் என்பதால் பலரும் தங்களுடைய அம்மாக்களுக்கு அவர்களுக்கு பிடித்த பொருட்கள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி தருவதில் ஆர்வமாக காட்டினர். சோமாட்டோவில் அதிக அளவில் ஆர்டர்கள் பெற்று, விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாக்லேட்கள், ஹேண்ட் பேக்குகள், பர்ஃப்யூம்கள் போன்ற பொருட்கள் அதிக அளவில் ஆர்டர் செய்ய பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சொமாட்டோவின் சிஇஓ தீபிந்தர் கோயல், இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் தாய்மார்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டார். இதையடுத்து, தனது நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களின் தாய்மார்களை அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று அலுவலகத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, தாய்மார்களை கௌரவித்து, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைபடங்களை தனது சமூக வலைதளத்தில் சொமாட்டோவின் சிஇஓ தீபிந்தர் கோயல் பதிவிட்டுள்ளார்.








