சமூக பணியில் நியூஸ் 7 அன்புபாலம்

சென்னை தாம்பரம் மாநராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலமும், எக்ஸ்னோரா அமைப்பும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் பல்வேறு சமூக…

சென்னை தாம்பரம் மாநராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலமும், எக்ஸ்னோரா அமைப்பும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  அந்த வகையில் எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள எரிகளை சுத்தம் செய்வது, பொது இடங்களில் உள்ள சுவர்களை சுத்தம்
செய்து விழிப்புணர்வு ஓவியம் வரைதல், சுற்று சூழலை பாதுகாக்க சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளன.

அதன்படி இந்த பணிகள் செய்து தொடர்பாக எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் செந்தூர்பாரி, சீதாராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் ஆணையர் இளங்கோவன் ஆகியோரை சந்தித்து திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் இந்த பணிகள் விரைவில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்து நடைபெற இருப்பதாக எக்ஸ்னோரா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.