ஜவான் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் நயன்தாரா, தீபிகா படுகோன் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், இதுவரை வெளியான பாலிவுட் முதல்நாள் வசூலில் இவ்வளவு பெரிய தொகையை படங்களிலேயே வசூலித்த படமாக உருமாறியுள்ளது.







