ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா? – மாமன்னன் படம் செய்த சாதனை!!!

மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட்…

மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள் இயக்குநரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு ஓபனிங் வந்ததில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வார இறுதி என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.