குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து : அதிகாலையிலேயே நீராட திரண்ட சுற்றுலாப்பயணிகள்!

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும் நிலையில், அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராட குவிந்தனர். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர்…

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும் நிலையில், அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராட குவிந்தனர்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். அருவியில் குளிக்கவும், குளு குளு சாரல் காற்றை அனுபவிக்கவும் சீசன் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு செல்வது உண்டு. இந்த ஆண்டுக்கான சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கேரளா மற்றும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. மேகமூட்டத்துடன் மெல்லிய சாரல் மழைத்துளிகளுடன் ஒரு ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மெயின் அருவியில் அதிகளவு நீர் விழுவதால் சுற்றுலா பயணிகளை நீண்ட வரிசையில் குளிக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஆண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து செல்கின்றனர் அதிகாலை முதலே அனைத்து அருவி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

பொதுவாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில், தற்போது சாதாரண நாட்களிலும் குற்றாத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.