‘என்றென்றும் புன்னகை’ – 24 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மாதவனுடன் நடிகை ஷாலினி!

24 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மாதவனை சந்தித்த ஷாலினி அவருடன் எடுத்த புகைப்படங்கள் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான திரைப்படங்களில் நடித்த பின் ‘அனியாதிபிராவு’ என்கிற மலையாள திரைப்படம் மூலம்…

'Smile Forever' - Actress Shalini With Actor Madhavan After 24 Years!

24 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மாதவனை சந்தித்த ஷாலினி அவருடன் எடுத்த புகைப்படங்கள் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக ஏராளமான திரைப்படங்களில் நடித்த பின் ‘அனியாதிபிராவு’ என்கிற மலையாள திரைப்படம் மூலம் நாயகியாக நடிகை ஷாலினி அறிமுகமானார். அந்த திரைப்படம் தான் தமிழில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் நடிகை ஷாலினிக்கு மிக சிறந்த வரவேற்பை தந்தது. தொடரந்து அதிக திரைப்படங்களும் நடித்தார். அதன் பிறகு, மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து ‘கண்ணுக்குள் நிலவு’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

1999ம் ஆண்டு நடிகர் அஜித்துடன் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். தொடர்ந்து,2000 ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அனைவரும் மனதில் இடம்பிடித்தார். இந்த திரைப்படத்தில் அவர்களது கதாப்பாத்திரத்தின் பெயரான கார்த்திக் மற்றும் சக்தி மிகவும் பிரபலம் அடைந்தது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள “பச்சை நிறமே, யாரோ யாரோடி” உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

இதையும் படியுங்கள் : “இஸ்ரேலின் தாக்குதலை குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது” – #Iran தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி!

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது குடும்பங்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தையும், அஜித் குமாருடன் சுற்றுலா செல்லும் போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஷாலினி பகிர்வார். இந்நிலையில், நேற்று அவர் பதிவிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மாதவனுடன் எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில்,” என்றென்றும் புன்னகை” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.