தினந்தோறும் தங்கம் விலையானது நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்பட்ட நிலையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று சவரனுக்கு 580 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.10,270க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் போலவே குறைந்துள்ள வெள்ளி, கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.142க்கு விற்பனை செய்யப்படுகிறது.







