சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தளபதி திரைப்படத்தின் ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் போல சிவகார்த்திகேயன் சிகையலங்காரம் இருந்தது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருந்தது. இந்த நிலையில் தற்போது மாவீரன் திரைப்படம் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படத்தின் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றது. இதன் காரணமாக படத்தின் சில காட்சிகளை நடிகர் சிவகார்த்திகேயன் மாற்றச் சொன்னதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குநர் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இருவருக்குள்ளும் சமரசம் ஏற்பட்டு, விரைவில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.







