சிவகங்கை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…!

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறைகளிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி வருகிறது. இந்நிலையில் இன்று பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனராக இன்னசெண்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக இருந்த ஜெயசீலன் சுற்றுலாத்துறை இயக்குனராகவும், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக ஸ்ரேயா பி சிங்-ம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகர போக்குவரத்து மேலான் இயக்குனராக இருந்த பிரபுசங்கர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராகவும், வணிகவரி இணை ஆணையராக இருந்த பொன்மணி திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.