சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்தார்!

கொரோனா பாதிப்பு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா பாதிப்பு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி உயிரிழந்துள்ளார்.


இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல இந்தியப் பிரபலங்கள் நடிகர்கள், பிரபல விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர். 


கொரோனா பாதிப்பு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகனும் பத்திரிகையாளருமான ஆஷிஸ் யெச்சூரி, டெல்லி குருகிராம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து சீதாராம் யெச்சூரி டிவிட்டர் பக்கத்தில், கொரோனாவால் தனது மகன் ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை உயிரிழந்ததாகத் தகவல் வெளியிட்டார். மேலும் தனது மகனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்,  சுகாதார ஊழியர்களுக்கும், துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்திருந்தார். மேலும் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஆஷிஸ் யெச்சூரி படித்தார். இதனையடுத்து டைம்ஸ் நவ்வில் இவர் பணிப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.