கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் என ரூ.2,000 நோட்டு திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகள் சரியான பரிவர்த்தனை நடைபெறாமல் இருந்ததால், தற்போது மே 23-ஆம் தேதி முதல் இவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் எனவும், அதற்கு பிறகு செல்லுபடி ஆகாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
https://twitter.com/mkstalin/status/1659768523290480640?s=20
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள், கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!”என்று விமர்சித்துள்ளார்.







