கர்நாடக அரசு பதவியேற்பு விழா; முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் 8 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு…

கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் பரமேஸ்வரா, பிரியங் கார்கே,  உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி…

கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் பரமேஸ்வரா, பிரியங் கார்கே,  உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர் தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இந்நிலையில், சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்கவுள்ளது. முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிலையில் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்க உள்ளனர். அவருடன் முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகிய 8 அமைச்சர்கள் தான் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழா இன்று மாலை பெங்களூருவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.