30.5 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

5 விக்கெட் வீழ்த்தினார் டிம் சவுதி: இந்திய அணி 345 ரன்கள் குவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 345 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக களமிறங்கினார். அவருக்கு டெஸ்ட் அணிக்கான தொப்பியை, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வழங்கினர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்-லும் களமிறங்கினர். மயங்க் அகர்வால், 13 ரன்களிலும் கில் 52 ரன்களிலும் புஜாரா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஹானே 35 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சிறப்பாக ஆடி, அரைசதம் அடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் , ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர் . நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் 75 ரன்களும் ஜடேஜா 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுக்களையும் டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது . சிறப்பாக ஆடிய ஜடேஜா, டிம் சவுதி பந்தில் போல்டானார். அடுத்து விக்கெட் கீப்பர் சஹா வந்தார். மறுபக்கம் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த 16-வது இந்திய வீரர் அவர் என்பது குறிப்பிடத்தது. பின்னர் ஸ்ரேயாஸ் 105 ரன்களிலும் சஹா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து அக்‌ஷர் படேல் மூன்று ரன்னிலும் அஷ்வின் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆயினர். இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கி இருக்கிறது. அந்த அணியின் டாம் லாதமும் வில் யங்கும் தொடக்க ஆட்டக் காரர் களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading