30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

‘தக் லைஃப்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது..

‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் ‘தக் லைஃப்’.  நாயகன் படத்துக்கு பிறகு, கமல்ஹாசன், மணிரத்னம்  ஆகியோர் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.  இதில் த்ரிஷா,  ஜெயம் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ்,  ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தில் ஜெகமே தந்திரம்,  மதுரம்,  ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.  ‘தக் லைஃப்’  படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஜன.24-ம் தேதி துவங்கியது.  இதனிடையே இப்பத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில்,  அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது.  இதில், த்ரிஷா, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த நிலையில், செர்பியா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading