உசிலம்பட்டியில் குழந்தை கடத்தப்பட்டதாக புகார்-விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

உசிலம்பட்டியில் தொழிலதிபரின் 4 வயது பெண் குழந்தை மாயமான சம்பவத்தில் கடத்தப்பட்டதாக சந்தேகப்பட்ட குழந்தையை நண்பர்களே அழைத்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டில் விட திரும்பி வந்தபோது கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

உசிலம்பட்டியில் தொழிலதிபரின் 4 வயது பெண் குழந்தை மாயமான சம்பவத்தில்
கடத்தப்பட்டதாக சந்தேகப்பட்ட குழந்தையை நண்பர்களே அழைத்து சென்றுவிட்டு
மீண்டும் வீட்டில் விட திரும்பி வந்தபோது கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் பார்த்தசாரதி – சத்யா
தம்பதியின் ஒரே மகளான 4 வயது பெண் குழந்தை ஜனனி. உசிலம்பட்டி அருகே தீனா
விலக்கு பகுதியில் உள்ள குழந்தையின் பாட்டி வீரம்மாள் வீட்டிற்கு அடிக்கடி
குழந்தை சென்று வந்தாகவும், இன்று விடுமுறை தினம் என்பதால் பாட்டி வீட்டிற்கு
குழந்தை ஜனனி சென்றிருந்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாட்டியின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை
காணவில்லை என பாட்டி வீரம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த
உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியதில் இருசக்கர வாகனத்தில் கணவன்-மனைவி குழந்தையை தூக்கி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையை துரிதப்படுத்திய காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகப்படும்படி குழந்தையுடன் வந்த சில்லாம்பட்டியைச் சேர்ந்த குமார் – மகேஸ்வரி தம்பதியை இடை மறித்து விசாரணை நடத்தியதில் குழந்தையை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக கணவன் மனைவியான குமார் – மகேஸ்வரி என்ற
இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அடிக்கடி பாட்டி வீட்டிற்கு வரும் குழந்தையை பாட்டி வீட்டின் அருகே உள்ள
கறிக்கடைக்கு கறி எடுக்க வரும் போது குழந்தைக்கும் கைதான மகேஸ்வரிக்கும்
பழக்கம் ஏற்பட்டிருந்தாகவும், இன்று வழக்கம் போல கறி எடுக்க வந்திருந்த போது
குழந்தையை கண்ட மகேஸ்வரி குழந்தையை கொஞ்சிவிட்டு வீட்டுக்கு வருகிறாயா என
அழைத்ததும் குழந்தையும், வீட்டில் சொல்லிவிட்டு வருவதாக கூறி வீட்டிற்கு
சென்று செருப்பு அணிந்து கொண்டு பாட்டியிடம் சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில்
ஏறி வந்தாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தைக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து தாங்கள் வாங்கி வந்த கறியை சமைத்து குழந்தையை சாப்பிட வைத்துவிட்டு மீண்டும் வீட்டில் வந்து விட வரும் போது குழந்தையை காணவில்லை என பரப்பரப்பாக இருந்தது தெரியவந்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சற்று நேரத்தில் தொழிலதிபரின் குழந்தையை காணவில்லை என அளித்த புகாரினால்
உசிலம்பட்டி பகுதியே பரபரப்பான சூழலில் குழந்தை நண்பரின் வீட்டிற்கு குழந்தை அழைத்து செல்லப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.