ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! போலி ஐபோனை டெலிவரி செய்த அமேசான்!

அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு போலி ஐபோன் டெலிவரி  செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பல பொருட்கள் மாறி வருவது,  சேதப்பட்ட பொருட்கள் வருவது போன்ற செயல்கள்…

அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு போலி ஐபோன் டெலிவரி  செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பல பொருட்கள் மாறி வருவது,  சேதப்பட்ட பொருட்கள் வருவது போன்ற செயல்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கம்.  மேலும் விலையுயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யும் போது அதற்கு பதிலாக வேறு பொருட்கள் வருவது போன்ற தவறுகளும் நடைபெறும்.  பின்னர் நிறுவனம் இதற்கு பொறுப்பேற்று அதற்கான தவறுகளை திருத்தி கொள்ளும்.

அந்த வகையில்,  கப்பார்சிங் என்பவர் அமேசானில் ஐபோன் ஆர்டர் செய்துள்ளார்.  ஆனால், அவர் போலி ஐபோனை பெற்றுள்ளார்.  இதற்கான ஸ்கீரின்ஷாட்டை தனது எக்ஸ் தள பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

https://twitter.com/GabbbarSingh/status/1761010098636501465

அமேசான் ஒரு போலி ஐபோனை வழங்கியுள்ளது. “அமேசான் தேர்வு” என மேல்குறியீடுயிட்டு,  பெட்டியில் கேபிள் இல்லை.  வெத்து டப்பா.  உங்களுக்கும் யாருக்காவது இதுபோல நடந்துருக்கா? என குறிப்பிட்டுள்ளார்.  பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த பதிவு அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் இந்த பதிவிற்கு ஈ-காமர்ஸ் பதிலளித்துள்ளது.

“@GabbbarSingh தொகுப்பில் தவறான தயாரிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்பதை அறிந்து வருந்துகிறோம்.  தயவுசெய்து உங்கள் விவரங்களை இங்கே நிரப்பவும் https://amzn.to/3wsqbs2. 6-12 மணி நேரத்தில் புதுப்பித்தலுடன் உங்களைத் தொடர்புகொள்வோம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/AmazonHelp/status/1761029756894495035

இதற்கு “படிவத்தை பூர்த்தி செய்துவிட்டேன்.  தயவு செய்து திரும்பத் தொடங்குங்கள்,” என்று கப்பார் சிங் பதிலளித்துள்ளார்.  அதற்கு நிறுவனம் பதிலளித்தது, “உறுதிப்படுத்தியதற்கு நன்றி.  தயவுசெய்து 6-12 மணிநேரம் காத்திருக்கவும்,  எங்கள் சமூக ஊடகக் குழு மின்னஞ்சல் மூலம் ஒரு தீர்மானத்துடன் உங்களைத் தொடர்பு கொள்ளும். உங்கள் பொறுமை பாராட்டத்தக்கது” என குறிப்பிட்டுள்ளது.  இந்த பதிவு 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.