முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திருமண நாளைக் கொண்டாடிய பிரியங்கா காந்தி-புகைப்படங்கள் வைரல்!

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது 26வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா 1997ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் 26வது திருமண நாளை பிப்ரவரி 18ஆம் தேதி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான சில புகைப்படங்களை பிரியங்கா காந்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பனி படர்ந்த மலைகளின் பின்னணியில் சில செல்ஃபிக்களைப் பகிர்ந்து கொண்ட அவர், “நாங்கள் சந்தித்து 38 வருடங்கள் ஆகிறது. நாங்கள் இன்னும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உருவாக்கிய அழகான குழந்தைகளுக்காக ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அவர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, வதேராவும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் உள்பட இரண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், திருமண நாள் வாழ்த்துகள் பி. திருமணமாகி சில ஆண்டுகள் கடந்துவிட்டன. பல அனுபவங்கள் கிடைத்துள்ளன. உன்னுடனான இந்த வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. உலகத்தின் மையத்தில் இருந்து சில பெயர் தெரியாத மற்றும் வேடிக்கையான நேரங்களை நாம் கையாண்டுள்ளோம்.

சில கடினமான நேரம் மற்றும் சந்தோஷமான நேரங்களையும் இருவரும் பகிர்ந்துள்ளோம், நமக்கு அது ஒற்றுமையுடனும், போருக்குத் தயாராக இருக்கவும் கற்றுக் கொடுத்தது. மொத்தத்தில், நாம் எப்போதும் மிகவும் வலுவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தோம். எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என்றும் கற்றுக் கொண்டோம்.

இதேபோல, வரும் ஆண்டுகளிலும் அன்புடனும், பாசம் மற்றும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். எப்போதும் உனக்காகவும், நம்முடைய குழந்தைகளுக்கும் அசைக்க முடியாத தூணைப் போல ஆதரவாக இருப்பேன். கடந்த காலங்களைப் போல வரவிருக்கும் ஆண்டுகளையும் நாம் உருவாக்கிய குடும்பத்துடன் நேசிப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓசூர் அருகே வேன் மீது லாரி மோதல்-11 பள்ளி மாணவர்கள் காயம்

G SaravanaKumar

“மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்”

Gayathri Venkatesan

ஜோ பைடன் முதல் கையெழுத்து: ட்ரம்பின் முக்கிய முடிவுகள் அதிரடி நீக்கம்!

Saravana