முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்க்கையும் அரசியல் பயணமும் ஒன்று தான் -ரஜினிகாந்த்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் அரசியல் பயணம் இரண்டும் ஒன்று தான் என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் அரசியல் பயணம் இரண்டும் ஒன்று தான் என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக
சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வாழ்க்கை வரலாற்று
புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இக்கண்காட்சியினை திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் , பொதுமக்கள் , பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் என தினமும் ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர் அந்த வகையில், இன்று கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  மிகவும் அருமையான புகைப்பட கண்காட்சி இது. அமைச்சர் சேகர்பாபு அழைத்துக் கொண்டே இருந்தார். படப்பிடிப்பிலிருந்ததால் வர இயலவில்லை அதனால் தற்போது வந்துள்ளேன். அமைச்சர் சேகர்பாபு மிகவும் விசுவாசமானவர், அன்பானவர், சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது எனத் தெரிவித்தார்.

அத்துடன், என் இனிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் அரசியல் பயணம் இரண்டும் ஒன்று தான். 54 ஆண்டுகள் அரசியல் பயணத்திலிருந்தவர். கட்சியில் உழைத்து படிப்படியாகப் பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால் அது மக்கள் அவர் உழைப்புக்கு அளித்த அங்கீகாரம் எனக் கூறினார்.

மேலும், நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.