”ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது அன்புமணியின் தனிப்பட்ட கருத்து” – ராமதாஸ் பேட்டி!

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அன்புமணி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம்  தைலாபுரத்தில் பாமகவின் 37ம் ஆண்டு தொடக்க விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். முன்னதாக அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ராமதாஸ் உடன் அவரது பேரன் முகுந்தன், கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வரும் தேர்தலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்து கேள்விக்கு எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராமதாஸ், “தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி பேசியது அவருடைய கருத்து” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.