ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.   நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது  ‘டன்கி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. …

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

 

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது  ‘டன்கி’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இப்படத்தை பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.

இதில் டாப்ஸி,  விக்கி கௌஷல்,  சதீஷ் ஷா,  தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  உலகளவில் வெளியான இத்திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்த நிலையில் டன்கி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேற்று (பிப்.15)  வெளியானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.