மணிரத்னத்திடம் வாய்ப்பு கேட்டாரா ஷாருக்கான்? வெளியான பரபரப்பு தகவல்!

டெல்லியில் நடைபெற்ற “இந்தியன் ஆஃப் த இயர்” விருது வழங்கும் விழாவில் நடிகர் ஷாருக்கான் இயக்குநர் மணிரத்னமிடம் பட வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து…

டெல்லியில் நடைபெற்ற “இந்தியன் ஆஃப் த இயர்” விருது வழங்கும் விழாவில் நடிகர் ஷாருக்கான் இயக்குநர் மணிரத்னமிடம் பட வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரை பெருமைப்படுத்தும் வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி விருதுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் 13ஆவது “இந்தியன் ஆஃப் த இயர்” விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. சூழலியல், யூத் ஐக்கான், பொருளாதாரம், விளையாட்டு, சமூக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதையும் படியுங்கள் ; “அயலக தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியர் விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட நடிகர் ஷாருக்கான், தான் எப்போதும் இந்தியனாகவே இருப்பேன் என்று உணர்ச்சிப் பெருக கூறினார்.

தொடர்ந்து,  அருகில் இருந்த இயக்குநர் மணிரத்னத்திடம் நடிகர் ஷாருக்கான் திரைப்பட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது.  நான் விமானத்தின் மேல் “சாய்யா சாய்யா” பாடல் போல் நடனமாடுவேன்” என கூறியுள்ளார். முன்னதாக ஷாருக்கானும் மணிரத்னமும் 1998 ஆம் ஆண்டு “தில் சே” திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர். மேலும், படத்தயாரிப்பாளர் கேட்டால்  “சாய்யா சாய்யா” பாடல் போல விமானத்தின் மேல் நடனமாட  தயாராக உள்ளதாக நகைச்சுவையாக கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.