நாகர்கோவிலில் இருந்து 3வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்

ராகுல் காந்தி எம்.பியின் 3வது நாள் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணத்தை நாகர்கோவிலில் இருந்து தொடங்கினார். இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் 7ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது. நேற்று கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை…

ராகுல் காந்தி எம்.பியின் 3வது நாள் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணத்தை நாகர்கோவிலில் இருந்து தொடங்கினார்.

இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் 7ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது.

நேற்று கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை நடை பயணம் செய்தார் ராகுல் காந்தி.

இன்று நாகர்கோவில், சுக்கான் கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை வழியாக நடைபயணம் மேற்கொள்கிறார். தக்கலையில் இன்று இரவு தங்குகிறார்.

தினமும் 20 முதல் 25 கிலோமீட்டர் வரை நடைபெறும் மேற்கொள்கிறார் ராகுல்.

முன்னதாக, 3வது நாள் நடை பயணத்தில் நாகர்கோவில் அருகே சுங்கான் கடைப்பகுதியில் பொதுமக்கள் வழங்கிய புறாக்களை பறக்க விட்டார் ராகுல்காந்தி எம்.பி. ராஜீவ் காந்தி படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியனை ராகுல் சந்தித்து கலந்துரையாடினார்.

இரண்டு ஆண்டுகள் கொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய மத்திய அரசு மறுக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய உணவு உற்பத்தியை விவசாயிகள் செய்து கொடுத்துள்ளனர் என்று பி.ஆர். பாண்டியன் ராகுலிடம் எடுத்துரைத்தார்.

உள்நாட்டு வணிகம் பெருமளவு அழிந்து வரும் நிலையில் பெரு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வருமான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் ராகுலிடம் கூறினார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை
ஏற்படுத்தவும் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150
நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்
காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.