பிரபல வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் வழக்கறிஞருமான ஹரீஷ் சால்வே 3வது திருமணம் செய்து கொண்டார்.
மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே 68 வயதாகிறது. இவர் தனது முதல் மனைவி மீனாட்சி என்பவரை 2020ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து கரோலீன் புரோசார்ட் என்பவரை மணந்தார். அந்த திருமணமும் பாதியில் முடிந்தது. இந்நிலையில் திரானா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற திருமண வரவேற்பில், முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சுனில் மிட்டல், கோபி இந்துஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1999 முதல் 2002ஆம் ஆண்டு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இருந்த ஹரீஷ் சால்வே. டாடா குழுமம், ரிலையன்ஸ் குழுமம் போன்ற தொழில் நிறுவனங்களுக்கும் வழக்கறிஞர்களாக இருந்து வருகிறார். பல சர்வதேச வழக்குகளிலும் வாதாடியுள்ளார்.