மத்திய அமைச்சரவை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம்!

மத்திய அமைச்சரவை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1987-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் தற்போது மத்திய அரசின் நிதித்துறை செயலராக உள்ளார். இந்நிலையில், அவர் மத்திய…

மத்திய அமைச்சரவை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1987-ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் தற்போது மத்திய அரசின் நிதித்துறை செயலராக உள்ளார். இந்நிலையில், அவர் மத்திய அமைச்சரவை செயலராக இன்று (10.08.2024) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அளித்துள்ளது.

இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு : “கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும்!” – பிரதமர் மோடி உறுதி

ஆகஸ்ட் 30ம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை செயலராக அவர் பதவிவகிக்க உள்ளார். முன்னதாக டி.வி.சோமநாதன் (2010-11)கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், 2015 முதல் 2017 வரை பிரதமரின் இணைச் செயலாளராக மற்றும் கூடுதல் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.