செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, செங்கோட்டையிலிருந்து ஈரோட்டிற்கு இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலானது, கரூர்-ஈரோடு இடையே நாளைய தினம் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்தப் பராமரிப்பு பணியானது தற்சமயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டை – ஈரோடு – செங்கோட்டை இடையே இரு மார்க்கமாக இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலானது நாளை வழக்கமாக இயங்கும் வழித்தடத்தில், வழக்கமான நேரத்திற்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.