செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதலமைச்சர் ஆய்வு

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெரும்பாக்கத்தில்…

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதி உதவியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்தியப் பாரம்பரியத்தையும், செம்மொழிகளையும் மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 45 ஆயிரத்துக்கும் மேலான தொன்மையான தமிழ்நூல்கள், மின்னணு நூலகம், கருத்தரங்கக் கூடங்கள், ஊடக அரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர், 8 புதிய நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த 12-ம் தேதி காணொலி காட்சி மூலம் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.