முக்கியச் செய்திகள் விளையாட்டு

அரையிறுதி போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே காணப்படுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணியில், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரிலீஸான பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியானது நயன்தாராவின் ’நெற்றிக்கண்’

Gayathri Venkatesan

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்

EZHILARASAN D

அனைவரும் சேர்ந்து இந்தியாவை வளமானதாக மாற்றுவோம்-பிரதமர் மோடி

EZHILARASAN D