தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் 21ம் தேதி செல்வப்பெருந்தகை பதவியேற்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பிப்.21-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில்  பதவியேற்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சட்டப்பேரவை தலைவர் பதவி கிள்ளியூர் தொகுதி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பிப்.21-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில்  பதவியேற்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த சட்டப்பேரவை தலைவர் பதவி கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவியை இவரது தாத்தா ஆர்.பொன்னப்ப நாடார் கடந்த 1971-ம் ஆண்டு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை வரும் 21ம் தேதி பதவியேற்கிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் செய்திக்குறிப்பு:

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த கே.எஸ். அழகிரியிடம் இருந்து புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., 21.2.2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம், எம்.பி., டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., பி. மாணிக்கம் தாகூர், எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., சு. திருநாவுக்கரசர், எம்.பி., குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகப் பெருமக்கள், இயக்க நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.