4 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது…

வாலாஜாபேட்டை அருகே 4 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு இருவரை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் போலீசார் வாகண தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,…

வாலாஜாபேட்டை அருகே 4 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு இருவரை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் போலீசார் வாகண தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த இரண்டு கார்களை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததை அடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷிராம் மற்றும் நியூரிசா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 4 லட்சம் மதிப்பிலான 4 டன் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.