முக்கியச் செய்திகள் தமிழகம்

நடிகர் ரஜினிக்கு சீமான் வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67வது தேசிய திரைப்பட விருதுகள், 2019-ம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர். என் . ரவி ஆகியோர் நடிகர் ரஜினிக்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வழியாக தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ‘இந்தியாவின் மிக உயரிய திரை விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள தமிழ்நாட்டின் உச்சத் திரைநட்சத்திரம் மதிப்பிற்குரிய சகோதரர் ரஜினிகாந்ததிற்கு வாழ்த்துக்கள்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் இயக்குநர் வெற்றிமாறன், பார்த்திபன், சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்ற தனுஷ், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினைப் பெற்றுள்ள இமான், சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ள விஜய்சேதுபதி, சிறந்த ஒலிக்கலவைக்கான விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி மற்றும் குழந்தை நாகவிஷால் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தாயகம் திரும்பிய அர்ஜென்டினா வீரர்கள்… உலக கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸி…

G SaravanaKumar

வாரிசு திரைப்படம் விஜய்க்கு கம்பேக் கொடுக்குமா? – விமர்சனம்

G SaravanaKumar

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Jayapriya