பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்கும் சீமான்?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், லவ் டுடே படப் புகழ் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், லவ் டுடே படப் புகழ் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கி வருகிறார். லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர்.

பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். தற்போது, படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா மையத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படப்பிடிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சீமான் இயற்கை விவசாயம் செய்பவராக நடிக்கிறாராம்!))

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.