‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

கேப்டன் மில்லர்  திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த…

கேப்டன் மில்லர்  திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும்,  சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: வெளியானது சலார் | எப்படி இருக்கு படம்?… ரசிகர்கள் கூறுவது என்ன?…

நடிகர் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தனர்.   அதிரடி காட்சிகள் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், யூடியூப்பில் 3 கோடி பார்வைகளைக் கடந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பாடியிருந்த ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ‘உன் ஒலியிலே’ எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடலை கபேர் வாசுகி எழுதியுள்ளார்.  இப்பாடலை சீன் ரோல்டன் பாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.