வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று நரேந்திரமோடி 3வது முறையாக மீண்டும் பிரதமாரக பதவியேற்பார் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு அதாவது 2024-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க 3-வது முறையாக, வெற்றி பெற முயற்சி எடுத்து வருகிறது.
இதனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. பெங்களூருவில் பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் 2 நாளாக காங்கிரஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தலைநகர் டெல்லியில் நேற்று பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இதில் 38 கட்சிகள் பங்கேற்றதாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து தமிழகத்தில் அதிமுக, தமாகா, பாமக ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற 38 கட்சிகள்:
1. பா.ஜனதா, 2. சிவசேனா (ஷிண்டே), 3. தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்), 4. ராஷ்டிரிய லோக் ஜனசக்தி, 5. அ.தி.மு.க., 6. அப்னா தளம் (சோனிலால்), 7. தேசிய மக்கள் கட்சி, 8. தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, 9. அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் சங்கம், 10. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, 11. மிசோ தேசிய முன்னணி, 12. திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி, 13. நாகா மக்கள் முன்னணி, 14. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே), 15. அசாம் கண பரிஷத், 16. பா.ம.க., 17. த.மா.கா., 18. ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், 19. சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி, 20. அகாலிதளம் (சன்யுக்த்), 21. மகாராஷ்டிரவாடி கோமந்த கட்சி, 22. ஜனநாயக் ஜனதா கட்சி, 23. பிரஹார் ஜனசக்தி கட்சி, 24. ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா, 25. ஜன சுராஜ்ய சக்தி கட்சி, 26. குகி மக்கள் கூட்டணி, 27. ஐக்கிய ஜனநாயக கட்சி, 28. மலை மாநில மக்கள் ஜனநாயக கட்சி, 29. நிஷாத் கட்சி, 30. என்.ஆர்.காங்கிரஸ், 31. எச்.ஏ.எம்., 32. ஜனசேனா, 33. அரியானா லோஹிட் கட்சி, 34. பாரத் தர்ம ஜனசேனா, 35. கேரளா காமராஜ் காங்கிரஸ், 36. புதிய தமிழகம், 37. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), 38. கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்று நரேந்திரமோடி 3வது முறையாக மீண்டும் பிரதமாரக பதவியேற்பார் என தீர்மானம் வாசிக்கப்பட்டது. சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே இந்த தீர்மானங்களை வாசிக்க அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அசோம் ஞான பரிசத் கட்சி தலைவர் “அதுல் போரா” ஆகியோர் அந்த தீர்பானத்தை வழிமொழிந்தனர்.







