பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் – அமைச்சர்

பள்ளிகள் திறக்காத காரணத்தால் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு மற்றும்…

பள்ளிகள் திறக்காத காரணத்தால் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமின் தொடக்க விழா, சென்னை சைதாப்பேட்டை பள்ளியில் நடைபெற்றது. முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 80 சதவீத ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும், மாணவர்கள் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிகள் திறக்காத காரணத்தால் குழந்தைகள் மன அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்தார். அதிமுக அரசு சமச்சீர் பாட திட்டத்தை மாற்றியதால் அரசுக்கு 32 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நந்தனம் கலை கல்லூரியில் நாளை துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளுக்கான கல்வி கேள்விக்குறியாகி விடும் என்பதாலேயே பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.