புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது. டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி…

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள, புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் சிங் தாக்கூர், கிஷன் ரெட்டி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும், அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு, விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.

இந்த பயணத்தில் திருவாடுத்துறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட 12 பேர் சென்றனர். மேலும் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆதீனங்களை சேர்ந்த பாரம்பரிய இசை கலைஞர்களும் உடன் சென்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.