மன்னார்குடி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழா-ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல் காரதெருவில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு எடுக்கப்பட்டு அதற்கான…

மன்னார்குடி அங்காளம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல் காரதெருவில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய முடிவு எடுக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த
திங்கட்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இந்தநிலையில் நான்காம் கால யாகசால பூஜைகள் நடைபெற்று பூர்ணா ஹூதியும் அதனைத் தொடர்ந்து தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள திருக்குடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை வலம் வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

அங்காளம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். குடமுழுக்கு விழாவில் மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து அங்காளம்மனை வழிபட்டனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.