நடப்பு நிதியாண்டில் 510 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி மதுரை ரயில்வே கோட்டம் சாதனைப் படைத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள தகவலில், நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை 510 கோடியே 35 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டை விட 97 சதவீதம் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில்கள் மூலம் 280 கோடியே 80 லட்சம் ரூபாயும் சரக்கு ரயில்கள் மூலம் 191 கோடியே 44 லட்ச ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே நிர்வாகம், 38 கோடியே 11 லட்ச ரூபாய் இதர வருமானமாக கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.
அண்மைச் செய்தி: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு, சர்வதேச உயரிய விருது: TX 2
மேலும், சமையல் எண்ணெய் போக்குவரத்திற்காக பழனி அருகே உள்ள புஷ்பத்தூர் ரயில் நிலையத்தில் திரவ சரக்கு கையாளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக, 73 வது குடியரசு தினத்தையொட்டி மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








