சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு; பக்கத்து கடை , சிசிடிவி காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் பக்கத்து கடைக்காரர், சிசிடிவி காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்-மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையின் சித்திரவதைக்கு…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் பக்கத்து கடைக்காரர், சிசிடிவி காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்-மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தான்குளம் பெனிக்ஸின் பக்கத்து கடையான கிங் எலக்ட்ரிக்கல்ஸின் உரிமையாளர் பிரபு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார்.

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரை காவல்துறையினரின் சித்ரவதையில் பலியாவதற்கு முன்பாக காவல்துறையினர் இருவரையும் அழைத்துசெல்வது போன்று வெளியான சிசிடிவி காட்சி தன்னுடையது என்று அவர் குறிப்பிட்டார். சாத்தான்குளம் காவலர்கள் பெனிக்ஸ் கடை முன்னர் வந்து ஜெயராஜூடன் பேசியது மற்றும் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு காவல்துறை ஜிப்பில் அழைத்து சென்றது உள்ளிட்ட காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது குறிப்பிட்டத்தக்கது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணைக்காக வரும் 5ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.